நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில், தேவேகவுடா நிறுத்தப்படுவார் என்று தகவல் வெளியான நிலையில், அதில் தமக்கு விருப்பமில்லை என மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.
கர்நாடகாவின் 4 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் முடிவடைகிறது. இதையடுத்து, நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவிய மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவேகவுடா, காங்கிரஸ் ஆதரவுடன், மாநிலங்களவை தேர்தலில் நிறுத்தப்படுவார் என அண்மையில் தகவல் வெளியானது.
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த தேவேகவுடா, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட தமக்கு விருப்பமில்லை என்றும், கட்சியை வலுப்படுத்துவதே, தமது தலையாய பணி என்றார். ஏற்கனவே, எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்று தாம் அறிவித்திருப்பதாகவும், தேவேகவுடா சுட்டிக்காட்டியிருக்கிறார்.