திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டிருப்பதற்கு மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா ஆகியோரின் லட்சியங்களுக்கு எதிராகவும், திராவிட இயக்கக் கோட்பாடுகளுக்கு எதிராகவும் திட்டமிட்டுப் பரப்பப்படும் கருத்துகளுக்கு ஸ்டாலினே சரியான எதிர்ப்பைக் காட்டி வருவதாகவும், இதனால் மக்கள் செல்வாக்கு நாளும் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பெரியார் சிலை உடைப்பு சம்பவங்களை சுட்டிக்காட்டியுள்ள வைகோ, மு.க.ஸ்டாலினுக்கு உயர்மட்டப் பாதுகாப்பு தொடர்வதுதான் நியாயமானது என்றும், ஆதலால் இசட் பிரிவு பாதுகாப்பை விலக்கிக்கொண்ட தமிழக அரசுக்கும், அதற்கு ஏற்பாடு செய்த மத்திய அரசுக்கும் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.