சட்டப்பேரவை வளாகத்தில் எதிரெதிரே வந்தபோது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் சந்தித்து பேசிக்கொண்டனர்.
சட்டப்பேரவையில் வெளிநடப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்துவிட்டு, மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் அறைக்கு சென்றார். அப்போது, ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் எதிரே வந்தார்.
எதிர்பாராத இந்த சந்திப்பின்போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அரசியல் ரீதியாக ஒருவருக்கொருவர் எதிரெதிர் திசையில் இருந்தாலும் நேரே சந்தித்தபோது வாழ்த்துக்களை பரிமாறி கொண்டுள்ளனர்.