முதலமைச்சர் பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் 13 யை அதிமுக கைப்பற்றியுள்ளது.
இதில் முதலமைச்சரின் சொந்த ஒன்றியமான எடப்பாடியில் மொத்தமுள்ள 13 வார்டுகளில் அதிமுக 9 வார்டுகளையும், அதன் கூட்டணி கட்சியான பா.ம.க 3 வார்டுகளையும் கைப்பற்றி உள்ளன. திமுக ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இது தவிர காடையாம்பட்டி, கொளத்தூர், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி, ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், வாழப்பாடி ஆகிய ஒன்றியங்களில் அறுதி பெரும்பான்மையுடன் அதிமுக வென்றி பெற்றுள்ளது.