இலங்கை தமிழர்கள் இந்தியாவில் இருக்க விரும்பினால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்றும் இல்லை, சொந்த நாட்டில்தான் வாழ வேண்டுமென அவர்கள் விரும்பினால் அங்கேயே செல்லலாம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ இதனை தெரிவித்துள்ளார்.