மதுரை மாவட்டம் வெளிச்சநத்தம் கிராமத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 45 அடி உயர வி.சி.க கொடிக் கம்பத்தை அகற்றச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் அக்கட்சியைச் சேர்ந்த 21பேர் மீது சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.