தாமும் இறுமாப்போடு சொல்வதாகவும், கட்டுப்பாடோடு பணியாற்றினால் 200 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும் திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி கூறி உள்ளார்.
திருச்செந்தூரில் நடைபெற்ற தி.மு.க மாநில ஆதி திராவிடர் நலக்குழு தென்மண்டல ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர் இதனை கூறினார்.
சென்னையில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி என்று இறுமாப்புடன் சிலர் பேசுவதாகவும், ஆனால் மக்கள் அதனை மைனஸ் ஆக்குவார்கள் என்றும் கூறிய நிலையில் கனிமொழி பேசி உள்ளார்.