கர்நாடகத்தின் ஹாவேரியை அடுத்த சவனூரில் பிரசாரத்தின்போது காங்கிரஸ் தொண்டரை துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அறைந்ததாகக் கூறப்படும் வீடியோவை, கர்நாடக பாஜக எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.
தேதி குறிப்பிடப்படதா வீடியோவை பகிர்ந்துள்ள பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மாளவியா, இதுபோன்று தொண்டர்களை சிவகுமார் அறைவது இது முதல்முறை அல்ல என்று கூறியுள்ளார்.