வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து கொளத்தூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தினார்.
அப்போது மேளதாளங்கள் முழங்க, நடன நிகழ்ச்சிகளுடன் தி.மு.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரச்சாரத்திற்கு இடையே பெண் ஒருவர் தமது குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டார். அந்த குழந்தைக்கு மரகதம் என்று ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கால் பந்தை உதைத்து சிறுவர்களின் கால்பந்து போட்டியை துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து ஐ.சி.எஃப் பகுதியிலும் முதலமைச்சர் வாக்கு சேகரித்தார்.