பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களை விட தமிழகத்திற்கு அதிகளவில் நலத்திட்டங்களை பிரதமர் மோடி செய்துள்ளதாக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து குன்னத்தூரில் பிரச்சாரம் செய்த போது பேட்டி அளித்த அவர், பிரதமர் ரோடு ஷோ செல்வதை அரசியலாக்க வேண்டாம் என்றார்.
தொடர்ந்து, நாமக்கல் தொகுதி பாஜக தொகுதி வேட்பாளராக K.P.ராமலிங்கத்தை ஆதரித்து ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையத்தில் வானதி சீனிவாசன் பிரச்சாரம் செய்தார்.