பா.ஜ.க.வில் மீண்டும் இணைந்தார் தமிழிசை சௌந்தரராஜன்
4 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக அலுவலகம் வந்த தமிழிசை
அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார் தமிழிசை சௌந்தரராஜன்
ஆளுநர், துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து பா.ஜ.க.வில் இணைந்தார்
4 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக அலுவலகம் வந்த தமிழிசை செளந்தரராஜனுக்கு உற்சாக வரவேற்பு
மக்களவை தேர்தலில் 400 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெல்லும் - அண்ணாமலை
பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் கடினமான முடிவை தமிழிசை எடுத்துள்ளார் - அண்ணாமலை
தமிழிசை செளந்தரராஜன் மீது மாற்று கட்சியினர் தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைத்து வருகிறார்கள் - அண்ணாமலை
பாஜகவில் மட்டும்தான் எந்த பொறுப்பில் இருந்தாலும் அதை விட்டுவிட்டு மக்கள் பணிக்கு வருவோம் - அண்ணாமலை
தம்பியிடம் இருந்து அக்கா என்ற முறையில் மீண்டும் பா.ஜ.க உறுப்பினர் அட்டையைப் பெற்றிருக்கிறேன் - தமிழிசை
"கஷ்டமான முடிவை இஷ்டப்பட்டு எடுத்துள்ளேன்"
"அண்ணாமலையின் கரத்தை வலுப்படுத்துவேன்"
அண்ணாமலை கூறியபடி கஷ்டமான முடிவை எடுத்திருந்தாலும் அதை இஷ்டப்பட்டு எடுத்துள்ளேன் - தமிழிசை
கமலாலயத்தில் மீண்டும் நுழைந்ததற்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன் - தமிழிசை