தமிழக சட்டப்பேரவையில், தொகுதி மறுசீரமைப்பு மற்றும் ஒரே நாடு-ஒரே தேர்தல் ஆகிய திட்டங்களை கைவிடக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 தனித்தீர்மானங்கள் கொண்டுவந்தார்.
பேரவையில் உறுப்பினர்களின் விவாதத்திற்கு பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் இரு தனித் தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாயநாயகர் அறிவித்தார்.
2 தனித் தீர்மானங்களை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர், நாடாளுமன்ற தேர்தலையே ஒரே நேரத்தில் நடத்தமுடியாத நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தலை விட காமெடி கொள்கை இருக்கமுடியுமா? என கேள்வி எழுப்பினார்..
ஒரே நேரத்தில் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், 30 மாநில சட்டமன்றங்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்துவது மாயாஜாலமா? எனவும் முதலமைச்சர் விமர்சித்துள்ளார்.