தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை திருவேற்காட்டில் நடைபெற்றது.
மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பங்கேற்றார். பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த தொண்டர்களுக்கு தடல்புடலாக உணவு பரிமாறப்பட்டது. கூட்டத்தில் 18 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் பொருளாளராக பொறுப்பு வகித்து வரும் பிரேமலதா பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். அறிவிப்புக்குப் பின் விஜயகாந்த் கால்களை தொட்டு அவர் வணங்கினார்.
தொடர்ந்து மேடையில் பேசிய பிரேமலதா, விஜயகாந்த் குறித்து பரப்பப்படும் வதந்திகளைக் குறிப்பிட்டு கண்ணீர் விட்டார்.