எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக 10 முறை கடிதம் அளித்தும் சபாநாயகர் மரபை கடைபிடிக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் நியமனம் தொடர்பாக சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி முறையிட்ட போது, ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ்பாண்டியன் குறுக்கிட்டு பேச முயன்றதால் அமளி ஏற்பட்டது.
இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை பேரவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களையும் அதிமுகவில் இருந்து நீக்கி, கட்சி சாராதவர்கள் என்று அறிவிக்க வேண்டும் என்றார்.