செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வரி ஏய்ப்பு ரூ.1000 கோடியாம்... 4 வாட்ச் ரூ.2.45 கோடியாம்ப்பா.. கட்டுகட்டாய் 2000 ரூபாய் நோட்டுக்கள்..! ஜெகத்ரட்சகன் வீட்டில் சிக்கியதாக தகவல்

Oct 10, 2023 08:04:22 AM

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 5ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற நிலையில் ஈக்காட்டுத்தாங்கலில் அவரது மகளுக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் 49 லட்ச ரூபாய் மதிப்புடைய வெளிநாட்டு கைக்கடிகாரம் உட்பட 7 கைக் கடிகாரங்கள் கைப்பற்றப்ட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு 2 கோடியே 45 லட்ச ரூபாய் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெகத்ரட்சகன் மகளுக்கு சொந்தமான இந்த கெஸ்ட் ஹவுஸில் மேலும், 2000 ரூபாய் நோட்டுகள் சிக்கின. புதிய 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்துவதற்கான அவகாசம் கடந்த 7ஆம் தேதியுடன் முடிந்த நிலையில், 2000 ரூபாய் நோட்டுகள் சிக்கியதாகவும், ஏற்கனவே திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் இருந்து 4 கோடி ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையில், ஜெகத்ரட்சகனின் மருமகன் நாராயணசாமி இளமாறன் Elite distilleries, Panyam cement உட்பட 12 நிறுவனங்களில் இயக்குனராக உள்ள நிலையில் அவரை அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகன் வீட்டுக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். வருமான வரி துறையின் துணை இயக்குனர் அந்தஸ்தில் உள்ள பெண் அதிகாரி ஒருவர் விசாரணை நடத்தினார். ஏற்கனவே வரி துறையின் துணை இயக்குனர் ஒருவர் விசாரணை நடத்திய நிலையில், பெண் அதிகாரியும் விசாரணையில் இணைந்தார்.

இந்த நிலையில் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய மற்ற இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட முக்கிய ஆவணங்கள் 3 சீலிடப்பட்ட கவர்களில் ஜெகத்ரட்சகன் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மருமகன் நாராயணசாமி இளமாறனிடம் விசாரிக்கப்பட்டது. ஜெகத்ரட்சகனின் மகள் ஸ்ரீநிஷாவிடமும் வருமானவரித்துறை விசாரணை நடைபெற்றது.

ஜெகத்ரட்சகனின் மகள் ஸ்ரீநிஷா குரோம்பேட்டையில் இயங்கி வரும் பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைவராகவும், தாம்பரத்தில் எஸ்ஆர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, குரோம்பேட்டையில் இயங்கி வரும் குரோம் லெதர் கம்பெனி, சந்திரகலா ரிசார்ட்ஸ் மற்றும் ஹோட்டல், அக்கார்டு டிஃபென்ஸ் உட்பட 21 நிறுவனங்களின் இயக்குனராக உள்ளார்.

இதனிடையே ஜெகத்ரட்சகனின் அலுவலகத்தில் நடந்த சோதனை நிறைவு பெற்று 4 அட்டைப் பெட்டிகளில் பணம், ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. ஜெகத்ரட்சகன் வீட்டிற்கு அருகில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றனர். ஒட்டு மொத்தமாக 1000 கோடி ரூபாய் அளவிற்கு ஜெகத்ரட்சகன் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், மொத்தமாக இதுவரை 15 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement
ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் மேல்நிலைப்பள்ளி மூடப்படுவதாக வெளியான தகவல்... பள்ளி நிர்வாகியின் காலில் விழுந்து கெஞ்சிய சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள்
மெட்டுவாவி கிராமத்தில் சிப்காட் தொழிற்சாலை இல்லை... வதந்திகளை நம்ப வேண்டாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
ரூ.1.20 கோடியில் அங்கன்வாடி மையம், சமுதாயக் கூடம் கட்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் அடிக்கல்..
யாரோ சிலருக்கு அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம்... அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவுக்கு விஜய் கண்டனம்
''நேற்றொரு கொள்கை, இன்று ஒரு கொள்கை என தி.மு.க. செயல்படும்'' முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
பா.ஜ.க.வுடன் இணைந்தால் தான் அ.தி.மு.க. வெற்றி பெற முடியும் - டி.டி.வி.
சின்னம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றவில்லை இ.பி.எஸை விமர்சித்த கே.என்.நேரு
முதலமைச்சர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக இருக்கிறேன் என்பதே மகிழ்ச்சி - திருமாவளவன்
எடப்பாடி பழனிசாமியின் தவறான முடிவால் அ.தி.மு.க. பலவீனம் அடைந்துவிட்டது - டி.டி.வி.தினகரன்
எப்போதும்வென்றான் குளம் நிரம்பி வெள்ளமாக பாய்ந்த உபரிநீர் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement