தமிழக அரசியல் களத்தில் திமுகவுக்கு யார் போட்டி என்பதில் தான் மிகப்பெரிய போட்டி நடப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்று கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, சனாதனத்தை பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டேதான் இருப்பேன் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்களில் 1200 பேருக்கு பணி நியமன ஆணைகளை உதயநிதி வழங்கினார்.
விழாவில் பேசிய அவர், நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலை வழங்கும் வகையில் டி.சி.எஸ். நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.