தேர்தல் நேரத்தில் மட்டுமே தன்மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருவதாகவும், 11 ஆண்டுகளாக ஒரே குற்றச்சாட்டை தெரிவித்து வருவதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி அவர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில், திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தன்மீது இன்று ஒரு குற்றச்சாட்டு சொல்லப்பட்டுள்ளது, நாளைக்கு கூட ஒரு குற்றச்சாட்டு வரலாம் என்று தெரிவித்தார்.
அவதூறுகளுக்கு தான் அஞ்ச மாட்டேன் எனவும், குற்றச்சாட்டு உண்மையென்றால் நடவடிக்கை எடுக்கலாமே எனவும் சீமான் கூறினார்.