அமைச்சர் பொன்முடியை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், அமலாக்கத்துறையினர் கையாளும் விசாரணை முறைகள் குறித்து ஓய்வுபெற்ற வருமானவரித்துறை அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
"ஒருவர் எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் , வலிமையானவராக இருந்தாலும் அமலாக்கத்துறையின் விசாரணையின்போது சில உணர்ச்சிப்பூர்வ கேள்விகளை கேட்டு நிலைகுலைய வைக்க முடியும் . விசாரிக்கப்படும் நபர்களின் உணர்ச்சிகளோடு விசாரணை அமைப்புகள் விளையாட விரும்புவதில்லை , ஆனால் உண்மையை வரவழைக்க உளவியல் அழுத்தத்தை ஏற்படுத்துவது அவசியம் என்கிறார் ஓய்வுபெற்ற வருமானவரித்துறை அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
"மென்மையான அணுகுமுறையுடன் கடுமையான கேள்விகளை கேட்பதே அமலாக்கத்துறையின் வழக்கம் என்று சுட்டிக்காட்டிய பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி ஆதாரங்களை தேடி அமலாக்கத்துறை வீட்டிற்குள் நுழைவதில்லை , முன்கூட்டியே திரட்டிய சாட்சியத்தை உறுதி செய்யவே சோதனைக்கு செல்வர் என்றார்
"கஷ்டடி முடிந்தால் பிணை கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் கைமாறிய பணம் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படாதபோது பிணை கிடக்க வாய்ப்பு அதிகம் என்றும் கூறிய பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி ,"கஷ்டடியின்போது மேலும் சில புதிய குற்றங்கள் கண்டறியப்படும் என்றும் புதிய குற்றங்களை முன்வைத்து அமலாக்கத்துறையால் காவலை நீட்டிக்குமாறு முறையிட முடியும்" என்றார்
" சொத்துக் குவிப்பிற்கு ஆதாரம் இல்லை என கீழமை நீதிமன்றம் ஒருவரின் வழக்கை தள்ளுபடி செய்த சில நாளில் அமலாக்கத்துறை 40 கோடிக்கு மேல் அவரது சொத்தை முடக்கியுள்ளது : எனவே பொன்முடி குறித்த வழக்கை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க முடியும்" என்றார் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, அதே நேரத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் மீது அமலாக்கத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளால் மக்களிடம் அத்துறை அதிக கவனம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்