அதிமுக ஆட்சி மீண்டும் அமையும் போது கொங்கு பாரம்பரிய கலையான கும்மியாட்ட கலையை தமிழகம் முழுவதும் நடைபெறுவதற்கு உறுதுணையாக இருப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே, வள்ளி கும்மி குழுவின் 75வது பவள விழா அரங்கேற்றத்தில் பங்கேற்ற அவர், திரைப்படம், ரேடியோ, தொலைக்காட்சி போன்ற விஞ்ஞான வளர்ச்சியினால் அழிந்து வரும் கும்மியாட்ட கலையை வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் பங்கேற்று கும்மியாடினர்.