செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

13 மணி நேர விசாரணை..! 100 கிடுக்கிப்பிடி கேள்விகள்..!! ரூ. 41.9 கோடி முடக்கம்..!!! பொன்முடி விவகாரத்தில் நடந்தது என்ன..?

Jul 19, 2023 07:09:07 AM

அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத் துறையினர் 2 நாட்களில் மொத்தம் 13 மணி நேரம் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். அவரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 81.7 லட்ச ரூபாய் இந்திய பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் 41.9 கோடி ரூபாய் மதிப்புள்ள வைப்பு நிதி முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்முடி, அவரது மகனான கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி. கவுதம சிகாமணி ஆகியோர் வசிக்கும் வீடு, விழுப்புரத்தில் உள்ள வீடு உட்பட 7 இடங்களில் அமலாக்கத் துறையினர் திங்களன்று சோதனை நடத்தினர்.

சோதனைக்கு இடையே அமைச்சர் பொன்முடியை இரவு 8 மணி வாக்கில் சென்னை சென்னை சாஸ்திரி பவன் 3-வது தளத்தில் உள்ள தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். அதிகாலை 3 மணி வரை நடந்த விசாரணைக்குப் பின் பொன்முடியை அமலாக்கத்துறையினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

காலையில் சைதாப்பேட்டை வீட்டில் பொன்முடியை அமைச்சர்கள் துரைமுருகன், ஐ. பெரியசாமி, கே.என். நேரு, ரகுபதி, சி.வி. கணேசன், மூர்த்தி உள்ளிட்டோரும், என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட வழக்கறிஞர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளும் நேரில் சென்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பேட்டியில், மடியில் கனமில்லை என்பதால் பொன்முடிக்கு வழியில் பயமில்லை என்றார்.

இவற்றைத் தொடர்ந்து மாலை 3-30 மணி வாக்கில் அமைச்சர் பொன்முடியும் அவரது மகனும் எம்.பி.யுமான கௌதம சிகாமணியும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு புறப்பட்டனர். வழியில் தி.மு.க.வினர் கார் ஒன்றில் பொன்முடியின் காருக்கு வழி ஏற்படுத்திக் கொண்டே சென்றனர்.

மாலை சரியாக 4 மணிக்கு சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தை அடைந்த பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணியிடம் அமலாக்கத்துறையினர் கதவு மூடிய அறை ஒன்றுக்குள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பொன்முடியிடம் 100 கேள்விகளை அமலாக்கத்துறையினர் கேட்டு, அதற்கு ஆம், இல்லை என்ற ரீதியில் பதில்களை பெற்றதாக தெரிகிறது. இரவு 10 மணி வரை இந்த விசாரணை நடந்தது. அதன் பின்னர் பொன்முடி வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

முதல் நாளில் 7 மணி நேரமும் 2-வது நாளில் 6 மணி மணி நேரமும் என மொத்தம் 13 மணி நேரம் விசாரணை நடந்தது. இத்துடன் பொன்முடியிடம் விசாரணை நிறைவடைந்து இருப்பதாகவும், மீண்டும் அமலாக்கத்துறை எப்போது சம்மன் அனுப்புகிறதோ அப்போது அவர் ஆஜரானால் போதும் என்றும் தி.மு.க. வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுரங்கத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி 5 இடங்களில் செம்மணல் குவாரிகளுக்கான உரிமத்தை தமது மகன், உறவினர்கள் மற்றும் பினாமிகளின் பெயரில் வழங்கியதாகவும், அதன் மூலம் கிடைத்த வருவாய், பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் பினாமி வங்கிக் கணக்குகளில் முதலீடு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது. இந்த கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க இந்தோனேசியாவில் பி.டி. எக்ஸெல் மெங்க் இந்தோ என்ற நிறுவனமும் ஐக்கிய அரபு அமீரகத்தில் யூனிவர்சல் பிசினஸ் வென்சர்ஸ் எஃப்.ஸி.இ என்ற நிறுவனமும் வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, இந்தோனேசிய நிறுவனத்தை 41.57 லட்ச ரூபாய்க்கு விலைக்கு வாங்கி, பின்னர் 100 கோடிக்கு விற்றதாக கணக்குக் காட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பொன்முடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, விசாரணையை திசை திருப்பும் வகையில், தங்கள் வீட்டில் இருந்த பணம் தங்கள் குடும்பத்தால் நடத்தப்படும் மருத்துவமனை மூலம் வந்தது என்ற பொய்யான தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அதற்கு ஏற்ப கணக்குகளை திருத்த முயற்சி நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ள அமலாக்கத்துறை, தாங்கள் அதை கண்டுபிடித்து தடுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது.

சோதனையில் 81.7 லட்ச ரூபாய் இந்திய பணம் மற்றும் 13 லட்ச ரூபாய் வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ள அமலாக்கத்துறை, 41.9 கோடி ரூபாய் மதிப்புள்ள வைப்பு நிதி முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதுதவிர, குற்றம் தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய பல ஆவணங்கள் சோதனையில் கிடைத்துள்ளதாகவும், அவற்றை தாங்கள் பரிசீலனை செய்து வருவதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.


Advertisement
"தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது பா.ஜ.க அல்லாத கட்சிகளையே குறிக்கும்" - எடப்பாடி பழனிசாமி
மருத்துவரை கத்தியால் குத்தபட்ட சம்பவத்திர்க்கு த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்
த.வெ.க. தலைவர் விஜய் மீது வைத்துள்ள பாசம் குறையவில்லை - சீமான்
இ.பி.எஸ் பண்பாடு இல்லாமல் பேசுகிறார் : முதலமைச்சர்
ரூ.7.32 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தை ஆய்வுசெய்தார் அமைச்சர் எ.வ.வேலு
த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் 18 மாதங்கள் தொண்டர்கள் ஒற்றுமையோடு இருக்க வேண்டுகோள்
நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல கண்டிப்பாக இ-பாஸ் அவசியம்...
விஜயுடன் இணைந்து புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதால் கூட்டணி மாற்றம் என்று கருத வேண்டாம் : திருமாவளவன்
நூலகப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு
அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

Advertisement
Posted Nov 15, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement