பொது சிவில் சட்டம் தேவைதானா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் நடக்கும் கூட்டத்திற்கு மதுரை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இஸ்லாமிய. கிறிஸ்தவர்களுக்குரிய சட்டமுறையை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பொது சிவில் சட்டம் குறித்து மத்திய அரசு பேசி வருவதாகக் குறிப்பிட்டார்.
இதனால் நாடு வல்லரசாகி விடும், பொருளாதார வீழ்ச்சியில் இருந்து முன்னேறி விடும் என்பதெல்லாம் கிடையாது என்று குற்றம் சாட்டினார்.
தேவாரம், திருவாசகம் பாடுவதற்காகவே சிதம்பரம் கோயில் கட்டப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், நீண்ட காலமாக நடைபெறும் இந்த பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காணாமல் இருப்பது தமிழினத்தின் இயலாமையை காட்டுவதாகக் குற்றம் சாட்டினார்.