தமிழ்நாட்டில் சில சக்திகள், அரசியல் ஜல்லிக்கட்டை தொடங்கி இருப்பதாகவும், நேர்வழியாக வரமுடியாமல், புறவாசல் வழியாக விளையாடி வருவதால் , மக்கள் ஏற்கமாட்டார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்து ஜல்லிக்கட்டு அமைப்புகளின் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய அவர், ஜல்லிக்கட்டு தீர்ப்பு வெற்றிக்கு முதல்வர் நடத்திய சட்ட போராட்டம் தான் காரணம் என கூறினார்.
20 கோப்புகள் ஆளுநர் இன்னும் நிலுவையில் வைத்துள்ளார், அதில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் குறித்த ஊழல் பட்டியலும் அடங்கும் என்றும், உதயநிதி தெரிவித்தார்.