கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்ட சபைக்கு ஒரே கட்டமாக நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை வரும் 13ந் தேதி நடைபெறவிருக்கிறது. இதில், ஆளும் பா.ஜ.க, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வதால், பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.