தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக சரத் பவார் அறிவித்துள்ளார்.
லோக் மாஜே சங்கதி' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் சரத் பவார் இதனை அறிவித்தார். மராட்டிய மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சரத்பவாரின் இந்த அறிவிப்பு அரசியல் களத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து முடிவு செய்ய கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை சரத் பவார் பரிந்துரை செய்தார். அந்தக் குழுவில் பிரபுல் படேல், சுனில் தட்கரே, கே கே ஷர்மா, பிசி சாக்கோ, அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல், சுப்ரியா சுலே, உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து இந்த உயர்மட்டக் குழு சரத் பவார் இல்லத்தில் கூடியது. இந்த சந்திப்பை தொடர்ந்து தமது முடிவை மறுபரிசீலனை செய்ய சரத்பவார் 3-4 நாட்கள் அவகாசம் கோரியிருப்பதாக அஜித் பவார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.