மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்ப்பதற்கான அரசியலின் ஒரு பகுதியாக மாநில ஆளுநர்கள் மாறிக் கொண்டிருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிவசேனாக் கட்சிப் பெயர் மற்றும் சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு வழங்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசையே கலைக்க கூடிய முக்கிய முடிவுகளை எடுக்கும்போது ஆளுநர் தன் அதிகாரத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
சிவசேனா கட்சிக்குள் அதிருப்தி நிலவியதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது என்பதை நியாயப்படுத்த முடியாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.