ஈரோடு இடைத்தேர்தலில் பணம் கொடுத்து திமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தேவர் குளத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய ராஜேந்திர பாலாஜி, திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளாகியும் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும், ஈரோடு இடைத்தேர்தலில் ஆடு மாடு தவிர அனைத்தையும் வாக்காளர்களுக்கு வாங்கி கொடுத்து திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என்றும் கூறினார்.