திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தூத்துக்குடி எஸ்.ஜோயல், மதுரை கு.பி.ராஜா உள்ளிட்ட 9 பேர், இளைஞரணி துணைச்செயலாளர்களாகவும், மாநில மகளிரணி தலைவராக விஜயா தாயன்பன், மாநில செயலாளராக ஹெலன் டேவிட்சனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, வரும் 1 ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுமென, கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.