அசாம் மாநிலத்திற்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பா.ஜ.க.தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அங்கு கட்சியின் புதிய மாநில அலுவலகம் ஒன்றை திறந்து வைக்க உள்ளனர்.
கவுகாத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக மாநில அலுவலகத்தை திறந்து வைத்துவிட்டு,பொதுக்கூட்டத்தில் இருவரும் பங்கேற்க இருப்பதாக மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.