காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று டெல்லியில் அக்கட்சியின் தற்காலிகத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அசோக் கெலாட் கட்சித் தலைமை தமக்கு எந்தப் பொறுப்பை அளித்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று கூறினார்.கட்சித் தலைமைக்கான தேர்தல் சுதந்திரமாக நடைபெறும் என்றும் அதில் தாம் தலையிடப் போவதில்லை என்றும் சோனியா காந்தி, கெலாட்டிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
யார் பெயரையும் தாம் பரிந்துரைக்கப் போவதில்லை என்றும் சோனியா காந்தி கூறியுள்ளார். கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டால் இருக்கும் பதவியை விட்டு விலக வேண்டும் என்றும் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை கடைபிடிக்கப்படும் என்றும் சோனியா காந்தி அசோக் கெலாட்டிடம் தெரிவித்துள்ளார்