ஜம்மு காஷ்மீர் தேர்தல் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு ஜம்முவில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக காஷ்மீர் அரசியல் கட்சிகளுக்குத் மாநிலத் தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்க பல்வேறு கட்சிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
தொகுதி மறு சீரமைப்பு, புதிய வாக்காளர்கள் சேர்க்கை, யாருக்கு வாக்குரிமை போன்ற பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.