குலாம் நபி ஆசாத்தின் விலகலைத் தொடர்ந்து இன்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.
கட்சித் தலைவர் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ள நிலையில், அவர்கள் வெளிநாடு சென்றிருப்பதால் காணொலி வாயிலாக பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
கூட்டத்தில், கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேதி குறித்தும், அதிருப்தியாளர்கள் கட்சியில் இருந்து விலகுவது குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியிலிருந்து கபில்சிபல் ஆனந்த் சர்மா குலாம் நபி ஆசாத் உள்பட பல மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர்