வேளாண் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பையே பட்ஜெட்டாக அமைச்சர் படித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்துச் சட்டப்பேரவைக்கு வெளியே எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.
வேளாண் பட்டியல் என்ற பெயரில் அத்துறை சார்ந்த அமைச்சர் கொள்கை விளக்க குறிப்பு அறிவித்து இருப்பதாகவும் இது வேளாண் பட்ஜெட் அல்ல எனவும் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளதாக குற்றம் சாட்டினார் மேலும் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை கால்நடைத்துறை பட்டு வளர்ச்சி துறை உள்பட பல்வேறு துறைகளுக்கு தனித்தனியாக அமைச்சர்கள் இருக்கும் நிலையில் அந்த துறையில் உள்ள திட்டங்கள் அனைத்தையும் வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.