"முடிந்தால் சட்டமன்றத்தை முடக்கிப் பாருங்கள்" என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
மதுரை ஓபுளாபடித்துறை பகுதியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், சட்டமன்றத்தை முடக்கி மீண்டும் தேர்தல் நடத்தினாலும் 200 இடங்களை திமுக கைப்பற்றும் என்றார்.