கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களை வென்று தொடர்ந்து 3ஆவது முறையாக அம்மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
மொத்தமுள்ள 144 கவுன்சிலர் பதவிகளுக்கான இடங்களில் 134 இடங்களை மம்தா கட்சி வென்று ஒட்டுமொத்தமாக சுமார் 72 சதவீத வாக்குகளை பெற்றுள்ளன. மேலும், பாஜக 3 இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தலா 2 இடங்களிலும் வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் முடிவு தேசிய அரசியலுக்கான வெற்றி என திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.