பாஜக-வுடன் கூட்டணி அமைத்துள்ளதாக பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.
டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்தப் பின் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிட்ட அமரிந்தர் சிங், முதற்கட்டமாக கூட்டணி உறுதியாகியுள்ளதாகவும், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி நவ்ஜோத் சிங் சித்துவுக்கு வழங்கப்பட்டது குறித்து ஏற்பட்ட பிரச்னையில் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி அக்கட்சியிலிருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற பெயரில் அமரிந்தர் சிங் புதிய கட்சியை தொடங்கினார்.