நாட்டில் பாஜகவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் வாரிசு அரசியலையும், சாதி, மதப் பிரிவினையையும் ஊக்குவிப்பதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் ஏட்டா நகரில் பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய ஜே.பி.நட்டா, பாஜக மட்டுமே மக்களுக்காகவும், அவர்களின் நலனுக்காகவும் பாடுபடுவதாகக் குறிப்பிட்டார்.
அதிகாரத்தில் அமர்ந்து அமர்ந்து ஆட்சி செய்வது தங்கள் நோக்கமில்லை என்றும், நாட்டைப் பலப்படுத்த அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதே நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
சில அரசியல் கட்சிகள் ஜின்னாவுடன் சர்தார் பட்டேலை ஒப்பிட்டுப் பேசுவது தமக்கு வருத்தமளிப்பதாகவும் நட்டா தெரிவித்தார்.