பீகார் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான தேஜஸ்வி யாதவ் திருமணம் டெல்லியில் நடைபெற்றது.
தனது பள்ளித் தோழி ராஜேஸ்வரி என்பவரை, அவர் கரம் பிடித்துள்ளார். லாலு பிரசாத்தின் கடைசி மகனான இவர், டெல்லியில் தன்னுடன் படித்த சக மாணவியை 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் அவர்களது திருமணம் நடைபெற்றது.
மிகுந்த பாதுகாப்பு கெடுபிடிகளுடன் நடைபெற்ற திருமணத்தில், முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்நிலையில், தேஜஸ்வியின் திருமணப் புகைப்படத்தை அவரது சகோதரி ரோஹிணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.