உத்தரப்பிரதேசத்தில் சாதி அரசியல், குடும்ப ஆட்சி, வாக்கு வங்கி அரசியல் ஆகியவற்றுக்கு யோகி ஆதித்யநாத் முடிவு கட்டியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஆசம்கரில் புதிய பல்கலைக்கழகம் கட்டுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டிப் பேசினார்.
பாஜக ஆட்சிக்கு வருமுன் பொருளாதாரத்தில் உத்தரப்பிரதேசம் நாட்டில் ஆறாமிடத்தில் இருந்ததாகவும், இன்று இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
40 மருத்துவக் கல்லூரிகள் உள்ளதால் மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கை மூவாயிரத்து எண்ணூறாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.