மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகும் எண்ணமில்லை என அந்தக் கட்சியின் அரசியல் ஆலோசகர் பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.
கட்சியின் அரசியல் ஆலோசகராக இருந்தும் தன்னிடம் கமல்ஹாசன் இதுவரை எந்த ஆலோசனையும் கேட்கவில்லை என்று மட்டுமே தான் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
வேறெந்தக் கட்சிக்கும் செல்லும் எண்ணம் தனக்கில்லை என்றும், குறிப்பாக அதிமுகவுக்கோ, திமுகவுக்கோ மீண்டும் செல்லக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாகவும் பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.