திமுகவின் 100 நாட்கள் ஆட்சி நடுநிலையோடு நன்றாக இருப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
திருவிடைமருதூரில் ஆலய தரிசனத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை பொதுமக்களும் அர்ச்சகர்களும் ஏற்றுக் கொண்டால் நாங்களும் ஏற்றுக் கொள்வோம் என்றார்.
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து கேட்டதற்கு தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என பதிலளித்தார்.