காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மாநிலத் தலைவர்அண்ணாமலை, ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினர் மீது தடையை மீறி கூடுதல், தொற்று நோய் பரவ காரணமாக இருத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, அங்கு அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனரை அகற்ற முயன்ற தஞ்சை நகரமைப்பு அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி தஞ்சை மாவட்ட பாஜக தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.