வருகிற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் கருத்து தெரிவிப்பதற்காக டெல்லி சென்றிருந்த கமல்ஹாசன், சென்னை திரும்பிய நிலையில், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.