கர்நாடகா முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகக்கூடும் என்ற ஊகத்தை அவர் அளித்த பேட்டி ஏற்படுத்தி உள்ளது.
எடியூரப்பாவுக்கு எதிராக சில பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கி வருவதால் அவருக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, தாம் முதலமைச்சராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி வருகிற 26 ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்.
அதில் பங்கேற்ற பின், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா என்ன முடிவு எடுக்கிறாரோ, அதற்கு ஏற்ப செயல்பட இருப்பதாக கூறினார். ஆனால், இதுவரை தம்மை ராஜினாமா செய்யுமாறு கட்சி மேலிடம் உத்தரவிடவில்லை என்றும் எடியூரப்பா தெரிவித்தார்.