தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராக இருக்கும் சி. வி. சண்முகம் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த போது சசிகலாவை விமர்சித்து பேசியிருந்தார். அப்போது முதல் இதுவரை500 க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளதாக சிவி சண்முகம் தனது புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
தொலைபேசியில் பேசும் நபர்கள் ஆபாசமாகவும் குடும்பத்தைக் கொன்று விடுவதாக மிரட்டல் விடுப்பதாகவும் சண்முகம் கூறியுள்ளார். தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்து வருகின்ற நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.