மேற்கு வங்க தலைமை செயலாளர் அலபான் பந்தோபாத்யாயாவை டெல்லிக்கு அனுப்புவது தொடர்பாக மத்திய அரசுக்கும், மமதா பானர்ஜிக்கும் இடையே நடக்கும் பனிப்போரில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பதவி நீட்டிப்பில் இருந்த தலைமைச் செயலாளர் இன்று அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்று விட்டதாகவும், மேற்கு வங்க அரசின் தலைமை ஆலோசகராக 3 ஆண்டுகளுக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
அலபான் பந்தோபாத்யாயா ஓய்வு பெற்ற இடத்தில் எச்.கே. திவேதி என்பவரை தலைமை செயலராக நியமித்துள்ளதாகவும் மமதா தெரிவித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் அனுபவம் வாய்ந்த அலபான் பந்தோபாத்யாயாவின் சேவை மாநிலத்திற்கு தேவை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.