மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு உள்ளிட்ட மேலும் இருவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின் அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் ஜ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதேபோல், மக்கள் நீதி மய்யத்தின் சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளராக இருந்த பத்ம பிரியாவும் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.