சென்னையில் ஒரே நாளில், சுமார் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், தங்கக்கட்டிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட அடையார் இந்திரா நகர் வாட்டர் டேங் பகுதியில், வாகன தணிக்கையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும்படையினர், மஹேந்திரா பொலிரோ வாகனத்தில், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 5 கோடியே 66 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
முன்னதாக, ஐஸ் அவுஸ் மற்றும் சைதாப்பேட்டையில் உரிய ஆவணங்கள் இன்றி ஏடிஎமில் நிரப்ப எடுத்து செல்லப்பட்ட 4 கோடியே 62 லட்சத்து 73 ஆயிரத்து 810 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தியாகராய நகரில் காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 12 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள், தங்க காசுகள் மற்றும் வைரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.