செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
அரசியல்

நீர் மேலாண்மைக்கு சிறப்பு திட்டங்கள்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

Mar 28, 2021 06:02:40 PM

திமுக ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தப்பட உள்ள நீர்மேலாண்மை திட்டங்களை பட்டியலிட்டுள்ள மு.க.ஸ்டாலின், ஏரி, குளங்களை பாதுகாக்க 10ஆயிரம் கோடி ரூபாயில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொகுதி திமுக வேட்பாளர் சாமிநாதன், தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் கயல்விழி, பல்லடம் தொகுதி மதிமுக வேட்பாளர் முத்துரத்தினம் ஆகியோரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். 

திமுகவை வீழ்த்த எத்தனையோ பேர் ஒன்று கூடியுள்ளதாக கூறிய மு.க.ஸ்டாலின், திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோனதுதான் வரலாறு என குறிப்பிட்டார். 

திமுக ஆட்சிக்கு வந்ததும் நீர்நிலைகளை பாதுகாக்க 10,000 கோடி ரூபாயில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்த மு.க.ஸ்டாலின், இந்திய நதிகளை இணைக்க மத்திய அரசை வலியுறுத்துவதோடு, தென்னக நதிகளும் இணைக்கப்படும் எனக் கூறினார். 

கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக இருப்பதாக குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என நம்பிக்கை தெரிவித்தார். கருத்துக்கணிப்புகள் எவ்வாறாக இருந்தாலும் கடைசி வரை களப்பணியாற்ற வேண்டும் எனவும் திமுக தொண்டர்களை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். 

ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் இது எனக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், நீட் திணிப்பு, இந்தி திணிப்பு, மாநில உரிமைகள், சுயமரியாதை ஆகியவற்றை மீட்டெடுக்க உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, ஈரோடு சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு கோபிசெட்டிபாளையம் திமுக வேட்பாளர் மணிமாறன், பவானி திமுக வேட்பாளர் துரைராஜ், அந்தியூர் திமுக வேட்பாளர் வெங்கடாசலம், பவானிசாகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.எல். சுந்தரம் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.


Advertisement
ஏ.எஸ்.பி பல்வீர் சிங்கிற்கு மனித உரிமைகள் ஆணையம் விரைவில் சம்மன்
திமுகவினரால் எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்படுவது பாசிசம் இல்லையா? - ஜெயக்குமார்
அரசு மருத்துவமனைக்கு 50 படுக்கைகளோடு தீவிர சிகிச்சை கட்டடம்...அடிக்கல் நாட்டிய பிரதமர்
சென்னை மாநகராட்சியின் இன்றை மாமன்ற கூட்டத்தில் 79 தீர்மானங்கள் நிறைவேற்றம்
புதிதாக திறக்கப்பட உள்ள முதல்வர் படைப்பகத்தை பார்வையிட்டார் அமைச்சர் சேகர்பாபு
தியேட்டரில் முதல் ஷோ ஓட்டுவது போல் நடந்த த.வெ.க. மாநாடு என அமைச்சர் ரகுபதி பேட்டி
தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முடிவுக்கு அன்புமணி கண்டனம்
விக்கிரவாண்டியில் த.வெ.க. மாநாட்டிற்கான பணிகள் தீவிரம்
விஜய்யின் அரசியல் செயல்பாடுகளைப் பார்த்து தான் கருத்து கூறமுடியும் - நடிகை கவுதமி பேட்டி
திருவான்மியூரில் உள்ள மருதீஸ்வரர் திருக்கோயில் 31 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Advertisement
Posted Nov 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வேலு நாச்சியார்.. குழந்தையுடன் போர்க்களத்துக்கு சென்றாரா ? "அண்ணே அது லட்சுமி பாய்..!" சீமானின் திடீர் தடுமாற்றம்

Posted Nov 02, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காதலனை கரம் பிடிக்க போலீஸ் வேடமிட்ட பெண்.. 'ஓசி'யில் மேக்கப் போட முயன்று சிக்கினார்..ராஜதந்திரம் அனைத்தும் வீணானது!

Posted Nov 02, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓவர்.. ஓவர் .. போதை.. ஓவர்.. போலீஸ்கிட்ட வம்புச் சண்டை.. சட்டையும்.. வண்டியும் போச்சு..! போதையன்ஸ் தீபாவளி அட்ராசிட்டி

Posted Nov 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதால் வெடித்த ஏர் பேக்.. பலியான மாணவன்.. ஓவர் ஸ்பீடால் பறிபோன உயிர்

Posted Nov 01, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

வெடித்துச் சிதறிய வெங்காய வெடிகள் துண்டு துண்டான இளைஞரின் உடல்


Advertisement