திமுகவின் தேர்தல் அறிக்கை செல்லாத கள்ளநோட்டு என்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மேட்டுப்பாளையம்,அவிநாசி,கவுண்டம்பாளையம்,கூடலூர்,குன்னூர் தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக வேட்பாளர்களையும் உதகையைச் சேர்ந்த பாஜக வேட்பாளரையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்துவைத்து ஓ.பன்னீர் செல்வம் உரையாற்றினார்.