விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி தன்னை ஆதரித்து பிரச்சாரம் செய்ய விஜயபிரபாகரனின் மகன் வர இருப்பதாக கூறியதால் குழப்பம் ஏற்பட்டது
அ.ம.மு.க கூட்டணியில் தேமுதிக சார்பில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் பார்த்தசாரதி வேட்புமனுதாக்கல் செய்தார். வேட்புமனுதாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பார்த்தசாரதி தனது வெற்றிவாய்ப்பு குறித்து பேட்டி அளித்தார்.
அப்போது அமமுக ஒரு புதிய கட்சி என்பதால் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக தெரிவித்த பார்த்தசாரதி அமமுக ஒரு எம்பி தேர்தலை சந்தித்து விட்டு தற்போது இந்த தேர்தலை சந்திப்பதாகவும் தெரிவித்தார்
தன்னை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் வருவார் என்பதற்கு பதிலாக, சற்று தடுமாறி விஜயபிரபாகரனின் மகன் தனக்கு பிரசாரம் செய்ய வருவார் எனக்கூறி செய்தியாளர்களை திகைக்க வைத்தார்